ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவில் காமாட்சி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் காமாட்சி சில தினங்களுக்கு முன் விஜயமாடசாமி என்பவரை தாக்கிவிட்டு 30,000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விஜயமாடசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்துள்ளனர்.
மேலும் காமாட்சி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையல் இருந்து வருவது குறிப்பிடதக்கது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு அருகிலேயே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி பதுங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் இருந்த கத்தி, வாள் போன்ற ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.