குடும்ப தகராறு காரணத்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோபிநாயக்கன்காடு பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றை குத்தகைக்கு வாங்கி அதை நிர்வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நேசமணியின் அக்காவான கலைசெல்விக்கும், அவரது தாயார் சங்கரம்மாவிற்கும் இடையில் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் நேசமணி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதன் பின் நேசமணி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் நேசமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேசமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.