தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கைதானதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் உருவாகி அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜேக்கப் ஜுமா தென்னாப்பிரிக்காவில் கடந்த பத்து வருடங்களாக அதிபராக இருந்தவர். இந்நிலையில் இவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகததால், நீதிமன்றத்தை அவமதித்ததாக 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் வன்முறையை ஏற்படுத்தி வருகிறார்கள். நாடு முழுக்க இருக்கும் பெரிய வணிக வளாகங்கள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை அடித்து நொறுக்கி பொருட்களை திருடுகிறார்கள்.
மேலும் டர்பன் நகரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சேமிப்பு கிடங்குக்குள் நுழைந்து பொருட்களை திருடிச்சென்றனர். மேலும் கிடங்குக்கு நெருப்பு வைத்தார்கள். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் பலியாகினர். எனவே இப்பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டு வருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் உணவிற்கு கூட பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.