Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! அவசரம் வேண்டாம்….! நம்பிக்கை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

இன்று மனதில் நம்பிக்கை வளர்ப்பது ரொம்ப முக்கியம். எந்த ஒரு காரியத்தையும் ஒருவித நம்பிக்கையுடன் செயல்படுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிகம் நிபந்தனையுடன் பண உதவியை பெற வேண்டாம். அவசரப்படாமல் எந்த ஒரு வேலையையும் செய்தால் சிறப்பாக இருக்கும். எதையும் நிதானமாக செய்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். எந்த காலத்திலும் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அப்படி பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால் அவர்களை சந்தேக நோக்கில் பார்க்க வேண்டாம். அதுவே உங்களுக்கு எதிராக திரும்பிவிடும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பணவரவு கண்டிப்பாக இருக்கும். சேமிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கும். செலவை குறைக்க நினையுங்கள்.

நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கின்றது. காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. ஏற்கனவே இருந்த பிரச்சனையும் இப்பொழுது சரியாகிவிடும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கிறது. ஆனால் படிப்பதற்கான சூழல் குறைவாக இருக்கிறது. பெற்றோர்கள்தான் அதனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை செயல்பட வைக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:    7 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |