ராமநாதபுரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் பள்ளி ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார்.
இதே போல் கீழத்தூவல் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் தொடர்ந்து குற்ற ஈடுபட்டு வருவதால் அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஹபீப் முகமது மற்றும் காளிதாஸ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.