நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், ருக்குமணி வண்டி வருது உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்ரஸ் படத்தில் அதர்வா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கோலி சோடா-2 பட பிரபலம் இசக்கி பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அட்ரஸ் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.