இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சமூக வலைத்தளங்களில் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகளை தொடங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொன்ராமுக்கு தெரிய வந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பொன்ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே! என் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கௌன்ட் தொடங்கப்பட்டு சில பேரிடம் பணம் கேட்பதாக அறிந்தேன். இதை யாரும் நம்ப வேண்டாம். அந்த அக்கவுன்ட்டை லிங்க் கீழே பதிவு செய்துள்ளேன். Friend Request என்று வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.