Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசாம் மாநில சீட்டுகள்… வசமாக சிக்கிய விற்பனையாளர்… கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத குற்றங்களை தடுக்கும் வகையில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சின்னக்கடை பகுதியில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசாம் மணிலா லாட்டரி சிட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 4,200 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |