கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் நேதாஜி நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேதுபதி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேதுபதியின் தந்தை ஆறுமுகத்திற்கு கல்லூரியில் இருந்து போன் வந்துள்ளது .
அதில் தங்கள் மகன் 16 அரியர் வைத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மகன் சேதுபதி அவருடைய வீட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.