Categories
தேசிய செய்திகள்

வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழி இல்லை என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் தொற்று காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநில முதல்-மந்திரிகளுடம் தடுப்பூசி வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் வெறும் பேச்சு மட்டும் தான் இருக்கிறதே தவிர, தடுப்பூசிக்கு வழி இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைகளை அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |