Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்… கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு….!!!

டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராய் விஜயன் தெரிவித்ததாவது: பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது பயனுள்ள வகையில் அமைந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தோம்.

முழுமையாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம் என்று தெரிவித்தார். அதேபோல் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை பினராயி விஜயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Categories

Tech |