பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . மேலும் ரம்யா கிருஷ்ணன், நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் .
இந்த வாரம் performance திகில இருக்கப்போகுது! 👻#BB ஜோடிகள் – வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/M9G9hAgRSn
— Vijay Television (@vijaytelevision) July 14, 2021
இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் காளி வேடம் போட்டு ஆடி முடித்த வனிதா ‘தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம்’ என கூறுகிறார். இதற்கு ரம்யா கிருஷ்ணன் ‘போட்டி என்றால் என்ன?, இரண்டு போட்டியாளர்களை ஒப்பிடக் கூடாது என நீங்கள் எப்படி சொல்லலாம்?’ என ஆவேசமாக கூறுகிறார். இதையடுத்து மைக்கை கொடுத்துவிட்டு வனிதா செட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த எபிசோடைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .