கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்தால் மான் குட்டி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள்,மயில்கள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஒரு வயதுடைய மான் குட்டி ஒன்று கிரிவலப்பாதையில் சுற்றி திரிந்து உள்ளது. அப்போது இந்த மான் குட்டி வரட்டுகுளம் அருகே வந்துள்ளது.
அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இந்த மான் குட்டியை கடித்துள்ளது. இதனால் காயமடைந்த மான்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மான் குட்டியை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பின் வனப்பகுதியில் புதைத்தனர்.