வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடந்து சொல்லும் போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மெதுவாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, யானை மற்றும் புலி ஆகிய பல வகையான விலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலையில் யானைகள் பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றது. இதனையடுத்து சாலைகளில் தனது குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக மழையில் நனைந்து கொண்டே மெதுவாக சாலையை கடந்து சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து தூரமாகவே தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதில் சில ஓட்டுனர்கள் யானைகள் சாலையைக் கடந்து செல்வதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் யானைகள் பகல் நேரங்களிலேயே சாலையில் செல்வதால் வாகன ஓட்டுநர்கள் குறைந்த வேகத்தில் வாகனங்களை ஒட்டி செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.