ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது பாம்பு, சிலந்தி, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைவதாக கூறுவது அனைத்தும் பொய் என்று கனேடியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சென்ட்ரல் கோஸ்ட் என்ற பகுதியில் வசித்து வரும் கனேடியரான Paul Ferrante, ஆஸ்திரேலியாவில் 8 வருடங்களாக வசித்து வருகிறேன் ஒருமுறைகூட தனது வீட்டில் பாம்பை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் மனிதனை கொல்லும் கோலா கரடி ஒன்று ஆஸ்திரேலியாவில் சுற்றி வருவதாகவும், பாம்பு, சிலந்தி, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைவதாக பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று Ferrante சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பலரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் தங்களது வீட்டுக்குள் வருகின்றன என்று சொல்கின்றனர். அதனை நம்புவதா வேண்டாமா என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.