மனைவி பிரிந்து சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜ் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.