Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அடடே! இந்த போன் நீங்க யூஸ் பண்றீங்களா…? ஒரு வருடத்திற்கு…. இதெல்லாமே இலவசம்…!!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வைக்கிறது. அந்த வகையில் முதன் முறையாக ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட போது வாய்ஸ்கால், டேட்டா, எஸ்எம்எஸ் அனைத்தும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஜியோவிற்கு அனைவரும் மாறத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து  சில காலம் கழித்து நெட்வொர்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய பின்னரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதற்கு காரணம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணம் வசூலிப்பது, அதிகமான சேவைகளை வழங்குவது ஆகும்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய சேவையை தொடங்கியது. அதன்படி, வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சேவைகளுக்கு ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறலாம் என்றும் இதற்கு வெறும் 749 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளது .இதில் முக்கியமாக விஷயம என்னவென்றால் ஜியோ பீச்சர் போன் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த சலுகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நெட்வொர்க் இணைப்புக்கும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதேபோல அதிவேக மொபைல் டேட்டா 24 ஜிபி வரையில் ஒரு வருடத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

Categories

Tech |