கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டது .
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் செலங்கார் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் இயங்கி வந்தது. ஆனால் இந்த மையத்தில் பணியாற்றி வந்த 204 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.