கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை 9 லட்சத்து 26 ஆயிரத்து மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இது அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்காக அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும் . மேலும் தடுப்பூசி முன்பதிவு செய்து கொண்டவர்களில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள் என்று அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.