தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் கடல் வழியாக ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க கடலோர காவல் படையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் நடத்தி குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.