தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், “அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. அதோடு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது முக்கியம் கிடையாது.
தமிழக மக்களை திராவிட கும்பல் இருந்து விடுதலைபெற அண்ணாமலை முதலமைச்சராக வேண்டும் என்பது விதி என்று பேசியுள்ளார். மேலும் திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்கள் என்றும் பேசியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் இவர் என்ன பேசுகிறார் என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சிலர் நகைச்சுவையாக பேசுவதாக எண்ணி அமைதியாக இருந்துள்ளனர்.