வழியில் கிடந்த தங்க மோதிரத்தை எடுத்த வாலிபர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள தைக்கா பகுதியில் ஷேக் முகமது இப்ராகிம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சுவாமி சன்னதி தெரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் ஷேக் முஹம்மது இப்ராகிம் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக கடையை பூட்டி விட்டு கீழே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை பார்த்து அதை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த தங்க மோதிரம் யாருடையது என்பது பற்றி விசாரணையில் ஆய்க்குடி பகுதியில் வசிக்கும் முத்துச்செல்வன் என்பவருடையது என்றும், அவர் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு செல்லும் போது அதை கீழே விழுந்து விட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் ஷேக் முகமது இப்ராகிம்மை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவருடைய கையினாலேயே அந்த மோதிரத்தை முத்துச்செல்வத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தங்க மோதிரத்தை மீட்டு வந்து கொடுத்த ஷேக் முஹம்மது இப்ராகிம்மை பாராட்டியுள்ளனர்.