Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த இடம் எங்க இருக்கு….? பதுங்கிய மர்ம நபர்கள்…. விரட்டி பிடித்த காவல்துறையினர்…!!

செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்து விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சரவணகுமார் என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அந்த வழியாக சென்ற இரண்டு வாலிபர்களிடம் ஒரு முகவரி குறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த இரண்டு வாலிபர்களும் திடீரென சரவணகுமாரை தாக்கியதோடு அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு பாரதியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் கன்டோன்மென்ட் காவல்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்த அரசு அலுவலக காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து அங்கேயே பதுங்கி விட்டனர். அதன் பிறகு காவல் துறையினரும் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து டார்ச் லைட்டின் உதவியோடு தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு வாலிபர்களையும் விரட்டி பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் இரண்டு வாலிபர்களும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ராஜு மற்றும் ஸ்ரீநாத் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |