Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணக்கூடாது… தந்தை மகன் கைது… 2 துப்பாக்கி பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வழவந்தி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் படசோலை கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விசாணையில் படசோலையை சேர்ந்த கோபால்(46) மற்றும் அவருடைய மகன் ரகுபிரியன்(23) ஆகிய இருவரும் 2 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த நட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |