Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடல்நிலை பாதிக்காமல் இருக்க… சுத்தமான முறையில் கிடைக்க வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை…!!

சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சுகாதாரமான குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் 751 கிராம ஊராட்சி பகுதி மற்றும் 10 பேரூராட்சி அமைப்புகள் மூலமாக பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும், இதில் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து பொது மக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் கலெக்டர் கூறியுள்ளார். அதன்பின் நிலத்தடிநீர் ஒரு நாளும் மற்றும் குடிநீர் ஒரு நாளும் பொதுமக்களுக்கு வழங்க அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் குறிப்பிட்ட நாள்களில் வழங்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் நிலத்தடி நீரா இல்லை குடிநீரா என்பது குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் செயலாளர்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

இதனையடுத்து வாரம் நாளொன்று எந்த தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் வழங்கப்படும் குடிநீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |