சீனா கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வது அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் என்று ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை சுமார் 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை சீனா எந்தவித உள்நோக்கத்தோடும் செய்யவில்லை என்றும் அறிவித்திருந்தது.
ஆனால் சீனாவின் Xinjiang ல் நடைபெற்றுவரும் மனித உரிமை குறித்த விஷயங்களில் உக்ரைன் நாடு தலையிடுவதை நிறுத்தாவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டிற்கு தரமாட்டோம் என்று உக்ரைன் நாட்டை மிரட்டியதாக சீனாவின் மீது புகார் வந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது சீனா பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வது அரசியல் காரணங்களுக்காகத் தான் என்று ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.