பைப்புகள் மூலம் சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, காவலூர், மாதகடப்பா மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார், கொரிபள்ளம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு பயன்படுத்தும் பைப்புகள் மூலம் தண்ணீரை எடுத்துச் சென்று சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு போடப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் ஊறல்களை காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் 1,000 மீட்டர் பிளாஸ்டிக் பைப்புகள், 50 மூட்டை மரப்பட்டைகள் போன்றவை கைப்பற்றி காவல்துறையினர் அழித்தனர். இதுகுறித்து கொரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, கப்பல் என்கிற முருகன், கேசவன், நடராஜன் போன்றோர் மீது வழக்குப்பதிவு செய்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.