கியூபாவில் காவல்துறையினருக்கும், விலைவாசி உயர்வு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கியூபா நாட்டில் ஹவானா என்னும் நகரம் அமைந்துள்ளது. இதற்கிடையே கியூபாவில் மருந்து பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் அமெரிக்காவின் தூண்டுதலே என்று கியூபா குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் ஹவானா நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் போராட்டத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் காவல் துறையினர்கள் சுமார் 100 போராட்டக்காரர்களை கைது செய்துள்ளார்கள். இதனை கியூபா அரசாங்கம் உறுதி செய்துள்ளது.