மது குடிக்க பணம் வேண்டுமென்று தொழிலாளியை கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டியவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் மாணிக்கம் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் சென்றுள்ளார்.
இதனையடுத்து முருகன், மாணிக்கத்திடம் மது குடிப்பதற்கு தனக்கு பணம் வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். அதற்கு மாணிக்கம் தன்னிடம் பணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு கோபமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென மாணிக்கத்தை குத்த முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிந்த காவல்துறையினர் முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.