Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் பெரிய நகரம். வேலூரை மூன்றாக பிரித்து மூன்று மாவட்டமாக அறிவித்து அதை போல சங்கரன்கோவிலையும்  தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். எல்லா தரப்பு மக்கள்,  அனைத்து அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தாக இந்த கோரிக்கையை வைத்துள்ளோம். தென்காசி மாவட்டம் என்பதால் எங்களுக்கு  வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. சங்கரன்கோவில் உப்பு , எலுமிச்சைய ,  அதிக அளவில் உற்பத்தியாகிறது. உலக நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்துகின்றோம் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |