Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணம் ஆகல…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் காட்டுவிளை பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசிங் உட்பட 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஜெயசிங் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மனவேதனையில் மது குடித்து வந்ததாக தெரிகின்றது. இதனையடுத்து ஜெயசிங் யாரிடமும் சரியாக பேசாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உறங்கச் சென்ற ஜெய்சிங் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஜெயசிங் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயசிங் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஜெயசிங்க்கு திருமணம் நடைபெறவில்லை என்ற மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |