Categories
உலக செய்திகள்

பின் விளைவுகள் மோசமா இருக்கும்..! அதிபரின் புதிய அறிவிப்பு… தடுப்பூசி போட குவியும் மக்கள்..!!

பிரான்ஸ் அரசு மக்களே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் சுகாதார அனுமதிச் சீட்டு இல்லை என்றால் கடும் கட்டுப்பாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அனுமதி சீட்டு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக 9 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன் அனுமதியை தற்போது பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுகாதார பணியாளர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

அவ்வாறு போட்டுக் கொள்ளவில்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அதிபர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வலைத்தளமான டாக்டோலிப்பின் தலைவர் ஸ்டானிஸ்லாஸ் நியோக்ஸ்-சாட்டோ, அதிபரின் இந்த அறிவிப்பின் மூலம் இரண்டு மடங்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் விமான பயணங்கள், ரயில் பயணங்கள் மேற்கொள்வதற்கும் சினிமா திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |