அடையாளம் தெரியாத வாகனம் மினி வேன் மீது மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 8 பேரை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஓன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மினி வேன் மதுரை மாவட்டத்திலுள்ள சத்தியபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் வேனின் பின்புறம் மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராமன் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காயமடைந்த 7 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.