Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையின் பின்புறம்…. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையின் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமாரி என்பதும், சட்டவிரோதமாக அப்பகுதியில் இந்த பெண் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |