Categories
மாநில செய்திகள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்…. பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்… சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் கடைகளில் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அரசின் வழிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |