இந்தியா என்னுடைய மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ளது உள்ளது என்று கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும் என் மனதிற்குள் இந்தியா ஆழமாக பதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு, இணையத்தின் சுதந்திரத்தின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு விவகாரங்கள்” குறித்து அவர் பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது,” செயற்கை நுண்ணறிவு மிக ஆழமான தொழில்நுட்பமாக கருதுகின்றேன். மேலும் மனித இனம் அதை தொடர்ந்து மேம்படுத்தி அதில் பணி செய்ய உள்ளது என்றார். இதையடுத்து சீன நாட்டில் இணைய பயன்பாடு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பியதற்கு, சுதந்திரமான இணையம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மேலும் எங்களுடைய எந்த இணைய சேவையும் சீனாவில் கிடைப்பதில்லை”, என்று அவர் கூறினார்.