Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அக்கா வீட்டிற்கு சென்றபோது… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொட்டலூரனி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆத்திமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் காந்திமதி தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப புறப்பட்டபோது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று காந்திமதியை வழிமறித்து திடீரென அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனை அறிந்த காந்திமதி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் மர்மநபர்கள் காந்திமதியின் கழுத்தில் அணிந்திருந்த 2  1/2பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிந்த காவல்துறையினர் பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |