Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படியா பண்றது… நடுரோட்டில் ஆடைகளை உருவி… கிராமத்தின் வினோத தண்டனை…!!

வேறொரு ஆணுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணிற்கு கிராம மக்கள் தந்த நூதன தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் தக்கோத் மாவட்டத்திலுள்ள தன்பூர் தாலுகாவில் பழங்குடியினர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடிவிட்டார். பின்னர் அவரது கணவரும் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி அந்த பெண்ணிற்கு வினோதமான தண்டனை வழங்கப்பட்டது. அந்த பெண்ணின் ஆடைகளை நடுரோட்டில் வைத்து உருவி அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அதுமட்டுமில்லாமல் அதே நிலையில் அந்த பெண் தனது கணவரை தோளில் சுமந்து ஊரில் வலம் வரும்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |