Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது” பறிபோன சிறுவனின் உயிர்…. அரியலூர் அருகே சோகம்….!!

உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் சீமான்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சிவசண்முகம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சீமான் தனது குடும்பத்துடன் திருப்பனந்தாள் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவசண்முகம் தனது நண்பர்களுடன் திருப்பனந்தாள் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அதன் பின் திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிவசண்முகம் சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த சண்முகத்தின் நண்பர்கள் அருகில் இருப்பவர்களிடம் சென்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி சிவசண்முகத்தை சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தேடி மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசண்முகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |