தொடர்ந்து பல குற்ற சம்பவங்களை செய்து வந்த 2 நபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் லோகநாதன் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைப்போல் பல கொலை மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிகிருஷ்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதன்பின் இம்மாவட்டத்தில் தொடர்ந்து 2 பேரும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இதை அறிந்த சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார்.
இதனையடுத்து அவர் அளித்த பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி லோகநாதன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரின் உத்தரவின் படி லோகநாதன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.