பலத்த மழை பெய்ததால் மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த சூழ்நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வந்துள்ளது. இதனை அடுத்து கோட்டியால் கூழாட்டுகுப்பம் பகுதியில் முருங்கை மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து ஆண்டிமடம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையோரம் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பகுதியிலும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.