கர்மவீரர் காமராஜரின் கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நாளை ஒட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமை அடைய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் வலியுறுத்தி சென்ற கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.