Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குண்டர் சட்டம் பாய்ந்தது” கைதான வாலிபர்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுந்தர்ராஜ் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு நெல்லை காவல்ஆய்வாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.

அந்தப் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு உத்தரவு நகலை காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார். அந்த நகலை காவல்துறையினர் பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனையடுத்து சிறுக்கன்குறிச்சி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முண்டன் என்ற சுடலைமுத்து என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் சுடலைமுத்து கொலை முயற்சியில் அடிக்கடி ஈடுப்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு நகலை வழங்கியுள்ளார்.

 

Categories

Tech |