Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

ஆம்னி பஸ் மோதி பெட்ரோல் நிலைய பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மட்டத்திலுள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மாகாந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக  ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் சட்டென பத்மா மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |