Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ராதிகா ஆப்தே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்த இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்- காயத்ரி தான் ஹிந்தி ரீமேக் படத்தையும் இயக்குகின்றனர் .

Felt very exploited because...': Radhika Apte on working in Ram Gopal  Verma's 'Rakta Charitra'

இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்  கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |