Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. பலியான பணியாளர்கள்…. கண்டனம் தெரிவித்த வெளியுறவுத்துறை…!!

பேருந்து குண்டுவெடிப்பு விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவத்திற்கு சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான்  பகுதியில் தாசு நீர் மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து நேற்று காலை ஒரு பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பேருந்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 9 சீன தொழிலாளர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்  “பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மேலும் சீன நாட்டினரின் திட்டங்கள் மற்றும் அமைப்புகளை பாகிஸ்தானில் பாதுகாக்க வேண்டும்” என்று லிஜியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |