நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 25-ஆம் தேதி முதலும் தொடங்கும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதியாகும். மேலும் மாணவர்களிடம் கட்டணத்தை நான்கு தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.