Categories
உலக செய்திகள்

தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு… புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்…!!

ரஷ்ய நாட்டு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீவானது அமைந்துள்ளது. இதனை அடுத்து கம்சாட்கா தீவில் நேற்று காலை தீடிரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் இருந்து  40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

Categories

Tech |