நாமக்கல்லில் சத்துணவு அமைப்பாளரிடம் ஒழுங்கீனமாக இருந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெண் சத்துணவு அமைப்பாளர் தேவியுடன் உடன் பள்ளியின் கழிப்பறையில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியர் சரவணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினர்.
இதனையடுத்து பொதுமக்கள் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரில் பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியர் சரணவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக சொல்லப்பட்டநிலையில் ஆசிரியர் சரவணன் மீது காவல்துறை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.