தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500பேருந்துகளில் 71 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகரப் பேருந்துகளில் 78 மகளிர் இலவசமாக பயணித்து உள்ளதாக தெரிவித்தார். சென்னையில் உள்ள பேருந்துகளில் முதற்கட்டமாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.